2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மன்னார் அகழ்வு பணிகளில் தாமதம்

Editorial   / 2018 ஜூன் 28 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் சதொச விற்பனை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகள், போதியளவு நிதி உதவி இல்லாமையால், தாமதமடைந்து வருவதுடன், அகழ்வுப் பணியை தொடர்ச்சியாகக் கொண்டு நடத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் வரை, அகழ்வு பணியானது தற்காலிகமாக நிறுத்தப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, அழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் அகழ்வுப் பணிகளில் மேலதிகமாக உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டு இணைக்கப்பட்டவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு, போதுமான நிதி இன்மையால், குறித்த அகழ்வுப் பணியை தொடர்ச்சியாகக் கொண்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி பங்களிப்பை சதோச நிறுவனத்திடம் கோரியுள்ள போதும், இதுவரை குறித்த நிறுவனம் எவ்விதமான சாதகமான பதிலையும் வழங்கவில்லை.

எனவே, குறித்த நிறுவனம் நிதி பங்களிப்பை செய்யாத பட்சத்தில், அகழ்வு பணியானது, அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .