2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மன்னார் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திட்டங்கள் குறித்து ஆராய்வு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நகர   பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலாளர் என்.பரமதாஸனின் நெறிப்படுத்தலில், இணைத் தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில், மன்னார் பிரதேச செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில், இவ்வாண்டில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பிலும்,அதன் முன்னேற்றம் குறித்தும் விரிவாக குறித்த கூட்டத்தில் குறிப்பாக ஆராயப்பட்டுள்ளது.

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வீதி, போக்குவரத்து, விவசாயம், கால்நடை, மீன்பிடி,குடிநீர்,சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகள் தொடர்பிலும் அவற்றில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

மன்னார் நகர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்கள் தலைமையில் இடம்பெற்ற பேதும் ஒரு சில குறைபாடுகள் காணப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் மண்டபத்தில் பயண்படுத்தப்பட்ட ஒலிவாங்கிகள் உரிய முறையில் செயற்படாமையால் உரையாற்றியவர்களின் கருத்துக்களை உரிய முறையில் கேட்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

மேலும், அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்களில் முக்கியமான துறைகளைச் சேர்ந்த திணைக்கள அதிகாரிகள் சமூகம் தராமை குறித்து இணைத் தலைவர்கள் விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .