2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மன்னார் நகர சபையின் தலைவராக ஜெராட் தெரிவு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 பெப்ரவரி 16 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நகர சபையின் தலைவராக, தமிழீழ விடுதலை இயக்கத்தைச் (டெலோ) சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு செய்யப்பட்டுள்ளாரென, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அறிவித்துள்ளார்.  
மன்னாரிலுள்ள விடுதியொன்றில், நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ் அறிவித்தலை விடுத்துள்ளார்.   
தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் நகரசபை மற்றும் இரண்டு பிரதேச சபைகளை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த சபைகளை நடத்துவதுத் தொடர்பில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதென்றும் கூறினார்.  சபையில் உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், முரண்பாடான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது எனவும், சபைகளில் எடுக்கின்ற முடிவுகளின் அடிப்படையில் சபைகளை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.  கட்சிக்கு எதிராக செயற்பட்டால் உடனடியாக குறித்த நபர், உறுப்பினர் பிரதிநிதித்துவத்தில் இருந்து நீக்கப்படுவதோடு, கட்சியில் இருந்தும் நீக்கப்படுவார் என்றும் அதற்கான அதிகாரம் கட்சியின் செயலாளர் நாயகத்துக்கு உள்ளதென்றும் தெரிவித்த அவர், நகர சபையின் உப  தலைவர் மற்றும் ஏனைய சபைகளின் தெரிவுகள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.  இந்தக் கலந்துரையாடலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண விவசாய அமைச்சர் எஸ்.சிவநேசன், வடமாகாணசபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X