2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘மன்னார் புதைகுழி மூலம் உண்மை வெளிவந்துள்ளது’

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட இரும்புக்கம்பியால் கட்டப்பட்டு எலும்புக்கூடு மூலம், எவ்வளவு கோரமாக சித்திரவதை செய்யப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு அடிமைகளாக கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்று உண்மை வெளிவந்துள்ளதாக” முன்னாள் வடமாகாண மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்தும் மன்னார் மனித புதைகுழியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21 குழந்தைகள் உட்பட பல எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்று சந்தேகப்படும் நிலையில், இந்த உண்மை வெளிச்சத்துக்கு வர வேண்டும் என எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.

இதேவேளை, வடக்கு கிழக்கில் முப்படையினர் கையகப்படுத்தி வைத்திருந்து வெளியேறிய அத்தனை இடங்களிலும் மனிதபுதை குழி இருக்கலாம் என சந்தேகம் எழுத்துள்ளது.

எனவே அவ்விடங்கள் சர்வதேச மத்தியஸ்துடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .