2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மன்னார் பெரும்போகச் செய்கையில் ’பயிருடன் வளரும் களைகள்; கட்டுப்படுத்த முடியவில்லை’

Editorial   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் மாவட்டத்தின் பெரும்போகப் பயிர்ச் செய்கை   பூர்த்தியடைந்துள்ள நிலையில், வயல்களில் பயிர்களுக்கு நிகராக களைகள் காணப்படுவதாகவும் அவற்றை, கிருமி நாசினியூடாகக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மன்னார் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது, மன்னார் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும், பெரும்போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர்களுடன்,  கோரை, கோழிச்சூடன், நெற்சப்பி போன்ற களைப்புற்கள் வளர்ந்துக் காணப்படுகின்றன.

எனினும், குறித்த களைகளைக் கட்டுப்படுத்த, பல்வேறு விதமான கிருமிநாசினிகள் பயன்படுத்தப்பட்ட போதும், அவற்கைக் கட்டுப்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளதென, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரச்சினை தொடர்பாக, மன்னார் மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கே.எம்.ஏ.சுகூரிடம் கேட்டபோது, விவசாயிகள், முறையான விவசாயச் செய்முறைகளைக் கடைபிடிக்காததன் காரணத்தாலேயே, இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

எனவே, விவசாயம் தொடர்பான சகல பிரச்சினைகளையும் தங்கள் பிரதேசங்களிலுள்ள விவசாயப் போதனாசிரியர்களை அணுகி, அவற்றுக்குத் தீர்வுகாண முடியுமென, அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .