2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு வைத்திய நிபுணர்கள் நியமனம்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு இரண்டு வைத்திய நிபுணர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட காலமாக ஏற்பட்டிருந்த மயக்க மருந்து வழங்கும் வைத்திய நிபுணர் மற்றும் உள நல வைத்திய நிபுணர்களின் வெற்றிடங்களுக்கே குறித்த இரு வைத்திய நிபுணர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மயக்க மருந்து வழங்கும் வைத்திய நிபுனர் நீண்ட காலமாக இல்லாத நிலையில், மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் எவையும் மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.

இதனால் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை வேறு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் இருவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் கடமையாற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் வாரத்தில் 3 நாட்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்.

தென்பகுதியில் இருந்து வைத்திய நிபுணர் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து வாரத்தில் இரண்டு நாட்கள் கடமைகளை மேற்கொள்ளுகின்றார்.

மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு நிரந்தரமாக மகப்பேறு வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்படும் வரை இவர்கள் தற்காலிகமாக கடமைகளை மேற்கொள்ளுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .