2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மன்னார் மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு 66,000 பேர் தகுதி

Editorial   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தின், மன்னார் நகரசபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, மாந்தை மேற்கு் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சிமன்றங்களுக்கான  தேர்தலில் இம்முறை வாக்களிப்பதற்கு, 66 ஆயிரத்து 94 பேர் தகுதி பெற்றுள்ளனர். 

மேலும், ஐந்து உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தும், 54 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு, 94 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 

மன்னார் நகரசபை

மன்னார் நகரசபைக்கு, 7 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்ய, 14 வாக்கெடுப்பு நிலையங்களில் 14,770 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

இதற்கு அமைவாக, உப்புக்குளம் பிரிவில் 3,073 வாக்காளர்களும் பள்ளிமுனைப் பிரிவில் 2,123 வாக்காளர்களும், எழுத்தூர் பிரிவில் 2,879 வாக்காளர்களும், சாவக்கட்டில் 1,906 வாக்காளர்களும், சௌத்பார் பிரிவில் 2,342 வாக்காளர்களும், பனங்கட்டுகொட்டு பிரிவில் 1,592 வாக்காளர்களும், பெற்றா பிரிவில் 855 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர். 

மன்னார் பிரதேச சபை

மன்னார் பிரதேச சபைக்கு, 11 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்ய, 22 வாக்கெடுப்பு நிலையங்களில் 22 ஆயிரத்து 468 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர். 

இதனடிப்படையில், தலைமன்னாரில் 1,203 வாக்காளர்களும் தலைமன்னார் பியர் கிழக்கில் 2,078 வாக்காளர்களும், துள்ளுக்குடியிருப்பு பிரிவில் 1,022 வாக்காளர்களும், பேசாலையில் (முதலாம் வட்டாரம் முதல் ஏழாம் வட்டாரம் வரை) 1,808 வாக்காளர்களும் பேசாலை தெற்கில் 1,807 வாக்காளர்களும், சிறுத்தோப்பு பிரிவில் 2,332 வாக்காளர்களும், புதுக்குடியிருப்பு பிரிவில் 1,482 வாக்காளர்களும், எருக்கலம்பிட்டி பிரிவில் 2,888 வாக்காளர்களும், தாழ்வுபாடு பிரிவில் 2,699 வாக்காளர்களும், தாராபுரம் பிரிவில் 1,560 வாக்காளர்களும், உயிலங்குளம் பிரிவில் 3,562 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். 

நானாட்டான் பிரதேச சபை

நானாட்டான் பிரதேச சபைக்கு, 8 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய, 23 வாக்கெடுப்பு நிலையங்களில் 15,702 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.  இதன் பிரகாரம், வங்காலை வடக்கில் 1,917 வாக்காளர்களும் வங்காலை பிரிவில் 2,026 வாக்காளர்களும், நானாட்டான் பிரிவில் 1,678 வாக்காளர்களும், வாழ்க்கை பெற்றான்கண்டல் பிரிவில் 2,577 வாக்காளர்களும், இலகடிப்பிட்டி பிரிவில் 2,313 வாக்காளர்களும், முருங்கன் பிரிவில் 2,040 பேரும், கற்கடந்தகுளம் பிரிவில் 1,202 வாக்காளர்களும், கட்டையடம்பன் பிரிவில் 1,999 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதிப்பெற்றுள்ளனர். 

மாந்தை மேற்குப் பிரதேச சபை

மாந்தை மேற்குப் பிரதேச சபை பிரிவுக்கு, 13 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய, 21 வாக்கெடுப்பு நிலையங்களில் 18,636 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். அதற்கு அமைவாக, வெள்ளாங்குளம் பிரிவில் 1,721 வாக்காளர்களும் பெரியமடு பிரிவில் 2,057 வாக்காளர்களும், இலுப்பைக்கடவை பிரிவில் 1,515 வாக்காளர்களும், விடத்தல்தீவு பிரிவில் 2,126 வாக்காளர்களும், நெடுங்கண்டல் பிரிவில் 1,493 வாக்காளர்களும், ஆட்காட்டிவெளி பிரிவில் 1,501 வாக்காளர்களும், அடம்பன் பிரிவில் 1,504 வாக்காளர்களும், வட்டக்கண்டல் பிரிவில் 1,973 வாக்காளர்களும், மடு பிரிவில் 1,769 வாக்காளர்களும், இரணைஇலுப்பைக்குளம் பிரிவில் 1,308 வாக்காளர்களும், காக்கியான்குளம் பிரிவில் 1,669 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

முசலி பிரதேச சபை

முசலி பிரதேச சபைப் பிரிவில், 10 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய, 14 வாக்கெடுப்பு நிலையங்களில், 14,518 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர். 

இவற்றில் அரிப்பு மேற்கு பிரிவில் 877 வாக்காளர்களும் அரிப்பு கிழக்குப் பிரிவில் 532 வாக்காளர்களும், பண்டாரவெளி பிரிவில் 1,493 வாக்காளர்களும், புதுவெளி பிரிவில் 894 வாக்காளர்களும், சிலாபத்துறை பிரிவில் 1,801 வாக்காளர்களும், அகத்திமுறிப்பு, கூழாங்குளம் பிரிவில் 1,846 வாக்காளர்களும், பொற்கேணி பிரிவில் 1,299 வாக்காளர்களும், மருதமடு, வேப்பங்குளம் பிரிவில் 2,073 வாக்காளர்களும், கொண்டச்சி பிரிவில் 1,757 வாக்காளர்களும், பாலைக்குழி பிரிவில் 1,946 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .