2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மரக் கடத்தல்காரர்கள் தப்பினர்

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு – துணுக்காய் - அம்பலப்பெருமாள்குளம் கிராமத்தின் காட்டில் இருந்து களவாக மரங்களை வெட்டி எடுத்துச் சென்றவர்கள், மக்கள் ஒன்று சேர்ந்ததையடுத்து, மரங்களுடன் வாகனத்தை வேகமாகச் செலுத்தி மின் கம்பங்கள் இரண்டை மோதித் தள்ளி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது.

அம்பலப்பெருமாள் குளத்தில் இருந்து தொடர்ச்சியாக மரங்கள் வெட்டப்பட்டு மக்கள் குடியிருப்பு வழியாக எடுத்துச் செல்லப்படுவதாக ஐயன்கன்குளம் பொலிஸாருக்கும் துணுக்காய் பிரதேச செயலகத்துக்கும் தொடர்ச்சியாக தகவல்கள் மக்களால் வழங்கப்பட்ட போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குறைப்பாடு காணப்படுகின்றது.

இக்கிராமத்தின் காட்டில் இருந்து கடந்த ஏழாண்டுகளாக மரங்கள் அழிக்கப்பட்டு மரங்கள் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை வாகனங்கள் இரண்டில் மரங்களை களவாகக் கொண்டு சென்றவர்கள் மின்கம்பங்களை இரண்டினை மோதித் தள்ளியதுடன், மரக்குற்றி ஒன்றினையும் வாகனத்தில் இருந்து வீழ்த்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தற்போது பத்து வரையான குடும்பங்கள், தமது வீடுகளுக்கான மின்சாரத்தை இழந்துள்ளன.

இது தொடர்பாக, கிராம அலுவலருக்கு, மக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .