2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘மரங்கள் வெட்டுவதற்கு வனவள அதிகாரிகள் துணை போகின்றனர்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாஸ்கரன் 

முல்லைத்தீவு - மாந்தை கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் வனவள அதிகாரிகளின் துணையுடன், விறகுகளுக்கான அனுமதிகள் என்ற போர்வையில் பெருமளவான காட்டுமரங்கள் வெட்டப்பட்டுக் கடத்தப்படுவதாக, அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

முல்லைத்தீவு - மாந்தை கிழக்குப் பிரதேசத்தில், தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் காட்டுமரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக விறகுகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதிகள் வழங்கப்படுகின்றன. 

விறகுக்காக வெட்டப்படும் மரங்கள், பயிர்செய்கை நிலங்களிலும் குடியிருப்புக் காணிகளிலும் இடையூறாக இருக்கின்ற விறகுத் தேவைக்குப் பயன்படுத்தக்கூடிய மரங்களை வெட்டுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுகின்ற போதும், வனவளத்திணைக்கள அதிகாரிகள் அரச காட்டுப்பகுதியில் விறகுகளை வெட்டிச்செல்வதற்கு உடந்தையாக இருக்கின்றனர்.  

மேலும், வெளியிடங்களுக்கு விறகுகளைக்கொண்டு செல்லும் பாரிய விறகு வியாபாரிகளுடன் இவர்கள் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கின்றனர். இதனால் இவர்களின் துணையுடன் விறகு என்ற போர்வையில், பெருமளவான பயன்தரும் மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டு செல்லப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இவ்விடயம் தொடர்பில் வனவள அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோதிலும் முயற்சி பயனளிக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .