2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மஹிந்த கூறிய அந்நாளில் மாத்திரமே யுத்தம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்றேன்’

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

இறுதி யுத்தத்தின் பின்னர், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் வேண்டுகோளுக்கு அமையவே, தான், யுத்தம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்று, பிரபாகரனின் சடலத்தை அடையாளப்படுத்தினேனே தவிர, அதற்கு முன்னர் ஒருபோதும் அப்பகுதிக்கு தான் செல்லவில்லையென, முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் (கருணா அம்மன்) தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில், நேற்று (19) காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இறுதி யுத்தத்தில், “தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள். நீங்கள் மாத்திரம் சென்று, பார்வையிட்டு உறுதிபடுத்தி கூறினால் மட்டுமே நான் நம்புவேன்” என அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தன்னிடம் கூறியதாகவும் இதற்கமைய, அவ்வாறு நடந்திருக்கக்கூடாததென நினைத்து களத்துக்குச் சென்று பார்த்த போது, அவர் உயிரிழந்திருந்ததாகவும் ஆனால் அதனைக்கூட தங்களுடையவர்கள் உரிமை கோருகின்றார்கள் இல்லையெனவும் தெரிவித்தார்.

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இன்னும் தாங்கள் மாவீரர் பட்டியலில் சேர்க்கவில்லையெனத் தெரிவித்த அவர், அவ்வாறு சேர்த்தால், அது ஒரு வரலாறெனவும் கூறினார்.

உலகத்திலேயே தமிழனுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவர் தான் இருக்கிறாரெனவும் அவர்தான் தலைவர் பிரபாகரன் ஆவாரெனவும், கருணா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .