2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மிருகவேட்டை அதிகரிப்புக்கு எதிராக போராட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தேராவில் கிராமத்தில் சட்டவிரோத வெடிபொருள்களை பயன்படுத்தி (கட்டுத்துவக்கு) மிருகவேட்டை ஆடும் சம்பவங்கள் அதிகாரித்து காணப்பட்டுள்ளது. இவ்வாறு மிருகத்துக்குக் கட்டப்பட்ட கட்டுத்துவக்கில் கால்நடையை மேய்க்க சென்ற இரண்டு சகோதரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளார்கள்.

இந்நிலையில் கட்டுத்துவக்கை கட்டியவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் அடையாளப்படுத்தியுள்ள போதும், கடந்த 19ஆம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதும், குறித்த நபர்தான் கட்டுத்துவக்கை கட்டி, பின்னர் அதனை அகற்றியதை கிராம மக்களும் கண்டுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, சட்டவிரோத நடவடிக்கையினை மேற்கொண்டவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு 05 ஆம் மாதம் 6 ஆம் திகதி வரை திகதியிடப்பட்டுள்ளது.

கட்டுத்துவக்கில் பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பொலிஸாரின் பக்கசார்பான நடடிக்கை காரணமாக சட்டவிரோ வெடிபொருளைப் பயன்படுத்தியவர் விடுதலையானதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான எந்த இழப்பீடுகளும் பெற்றுக்கொடுக்காத நிலையில் பொலிஸாரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.

கிராமத்தில் சட்டவிரோத வெடிபொருள் பயன்பாடு தொடர்பில் கிராம மக்கள் கிராம அபிவிருத்தி சங்கத்திடம் முறையிடப்பட்ட போது சங்கத்தினர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை தொடர்ந்து வருவதாகவும் பொலிஸாரின் இந்த செயற்பாட்டை கண்டித்தும் சட்டவிரோ வெடிபொருள் பாவனையாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஞாயிற்றுக்கிழமை (23), கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக, கிராம அபிவிருத்தி சங்கத்தினர் அறிவித்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .