2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முல்லைத்தீவில் சிறுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் அதிகளவான மக்கள் தொடர்ந்து சிறுநீரக நோய்ப் பாதிப்புக்குள்ளாகி வருவதாக, பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு துணுக்காய் ஆகிய பகுதிகளில் சிறுநீரக நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகிய பலர் உயிரிழந்துள்ளனர். இதனைவிட, தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளர்கள் மாதாந்த சிகிச்சைகளை மல்லாவி வைத்தியசாலையில் பெற்று வருகின்றனர்
இதனை விட அதிகளவானோர் வவுனியா வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு குறித்த பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினை காரணமாகவே இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க கூடிய வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, ஒவ்வொரு கிராமத்திலும் நீர் சுத்தகரிப்பு இயந்திரங்களை கிராம மட்ட அமைப்புகளுக்கு வழங்கி அதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .