2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

‘முல்லைத்தீவில் தண்டுத் தத்தியின் தாக்கம் தலைதூக்கியுள்ளது’

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக, கபில நிற வெண்முதுகுத் தண்டுத்தத்திகளின் தாக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்டப் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், நிலவிய மழையுடனான காலநிலையை அடுத்து, வயல் நிலங்களில், உயர் ஈரப்பதனும் கூடியளவான பயிர் அடர்த்தியும் காணப்படுவதால், கபில வெண்முதுகுத் தண்டுத் தத்திகளின் பெருக்கத்துக்குச் சாதகமாகக் காணப்படுவதாகவும் கூறினார்..

இதன் தாக்கம் தென்னியன்குளம், கோட்டைகட்டியகுளம், அம்பலப்பெருமாள் குளம், தச்சடம்பன், தேறாங்கண்டல், உயிலங்குளம், ஐயன்கன்குளம், ஒலுமடு, தண்ணிமுறிப்பு ஆகிய பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இதன் தாக்கத்தின் முதல் அறிகுறியாக, நெற்பயிர் மஞ்சள் நிறமாக மாறுமெனத் தெரிவித்த அவர், பின்னர், 2, 3 நாள்களில் கபில நிறமாக மாறி தொட்டம் தொட்டமாக வைக்கோல் நிறமாக எரிந்தது போல் காட்சியளிக்குமெனவும் கூறினார்.

இந்த நிலைமை ஏற்டும் வரை காத்திருக்காமல், விவசாயிகள் தங்கள் நெற்பயிர்களை அவதானித்து, தத்திகளைக் கட்டுப்படுத்துவதற்கு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள விவசாய போதனாசிரியர்களைத் தொடர்புகொண்டு, அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .