2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவில் மலேரியா அபாயம்

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், மலேரியா க் காய்ச்சல் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்ட மலேரியாத் தடுப்பு இயக்கத்தின் வைத்தியப் பொறுப்பதிகாரி வி.விஜிதரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டப் பிராந்தி சுகாதாரத் திணைக்களப் பணிமனை மண்டபத்தில், இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர் கூறியதாவது,

“இலங்கையில், மலேரிய நுளம்பு முற்றாக அழிக்கப்பட்டு விட்டாலும், அது முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற குளங்கள், ஆறுகள், நீர் ஓடைகளிலேயே, மலேரியாவைப் பரப்பக்கூடிய அனோபிளிஸ் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களாகக் கணிக்கப்பட்டுள்ளன.

“முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து, இந்தியாவுக்குச் சென்றுவரும் மக்களின் அளவு அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்றால், அதற்குரிய தடுப்பு மருந்துகளை ஏற்றிக்கொள்ளலாம். மக்கள் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குச் செல்வதாக இருந்தால், தடுப்பு மருந்தை எடுக்க வேண்டும்” என, அவர் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .