2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு கடும் காற்று: இரண்டு வீடுகள் சேதம்

Editorial   / 2020 மே 20 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

ஆம்பன் புயலின் தாக்கத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல்கொந்தளிப்பும் கடும் காற்றும் வீசிவரும் நிலையில், இன்று (20) காலை இரண்டு தற்காலிக வீடுகள் சேதமடைந்துள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட இருட்டுமடு, சுதந்திரபுரம் மத்தி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளே, இவ்வாறு சேதமடைந்துள்ளன.

இதனால், 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிராம சேவகர் ஊடாக பாதிக்கப்பட்ட வீடுகளின் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்கு, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த இரண்டு நாள்களாக கடும் காற்று வீசிவரும் நிலையில், கடலின் சீற்றமும் அதிகரித்து காணப்படுவதுடன், முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர்கள் 5ஆவது நாளாகவும் கடற்றொழிலுக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .