2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முல்லைத்தீவை வாட்டும் வரட்சி

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சியுடனாக வானிலை காரணமாக, 8,103 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் இடம்பெற்றுவருவதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், விவசாயிகளுக்குக் கட்டம் கட்டமாக வரட்சி நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், நேற்று  (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், கரைதுறைப்பற்றுப் பிரதேசச் செயலகப் பிரிவில் 390 குடும்பங்களுக்கும், புதுக்குடியிருப்புப் பிரதேசச் செயலகப் பிரிவில் 3129 குடும்பங்களுக்கும், துணுக்காய் பிரதேசச் செயலகப் பிரிவில் 222 குடும்பங்களுக்கும், ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலகப் பிரிவில் 1,895 குடும்பங்களுக்கும், வெலிஓயா பிரதேசச் செயலகப் பிரிவில் 1,996 குடும்பங்களுக்கும், மாந்தை கிழக்குப் பிரதேசச் செயலகப் பிரிவில் 471 குடும்பங்களுக்குமாக மொத்தமாக 8,103 குடும்பங்களுக்கு, இடர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதியுதவி ஊடாக, குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.

அத்துடன், மாந்தைக் கிழக்குப் பிரதேசத்தில் உள்ள கிணறுகளை ஆழப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் அதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ளவது தொடர்பில், இடர்  அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான  வரட்சி நிவாரணம் (உலருணவு) வழங்கும்  நடவடிக்கை  தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களாக   14,999 குடும்பங்கள்   அடையாங்காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதில், முதல் கட்டமாக,  6,824 விவசாயிகளுக்கும், 2ஆம்  கட்டமாக 7,296 விவசாயிகளுக்கும் உலருணவு விநியோகம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவட்டத்தில், வரட்சி தொடர்ந்து நீடிக்குமாக இருந்தால், குடிநீர் விநியோகச் செயற்றிட்டத்தை மேலும் நீடிக்க வேண்டிய நிலை ஏற்படுவதோடு, பயிர்ச்செய்கைகளும் பாதிக்கப்படுமென, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .