2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மேம்பாலமாக மாற்றி அமைக்க தொடர்ச்சியாக கோரிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் தாழ்பாலத்தினை, மேம்பாலமாக மாற்றி அமைக்குமாறு அக்கராயன் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென, பொது மக்களினால் கவலைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய குளமாகிய அக்கராயன் குளமானது, மழை காலத்தில் நிரம்பி வழிகின்றபோது அக்கராயன் திருமுறிகண்டி வீதியில் அமைந்துள்ள தாழ்பாலம் ஊடாக, தாழ் பாலத்தினை மூடி மழை வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.

இதன் காரணமாக, அக்கராயன் பிரதேச மருத்துவமனையின் நோயாளர் வண்டியானது, கிளிநொச்சி பொதுமருத்துவமனைக்கு நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்படுவதுடன், கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம், அக்கராயன் ஆரம்ப வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு அக்கராயன் கிழக்கு, அமதிபுரம் கிராமங்களின் மாணவர்கள் வருகை தரமுடியாத நிலைமை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பல தடவைகள் ஆராயப்பட்ட போதிலும் மேம்பாலம் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இனி வருங்காலம் மழை காலம் என்பதினால் குறித்த இடத்தில் மேம்பாலத்தினை அமைக்குமாறு அக்கராயன் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .