2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யானைகளைக் கட்டுப்படுத்தவும்

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - தென்னியங்குளம் கிராமத்தில் யானைகளைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னியங்குளம் கிராமத்தில், தற்போது காலபோக நெற்செய்கை அறுவடை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வயல் நிலங்களுக்குள் வருகை தரும் யானைகளை நெற்பயிர்களை அழித்து வருவதாகவும் பயன்தரு தென்னை, வாழைகளையும் அழித்து வருவதாகவும் மாலை 4 மணிக்கு பின்னர் கிராம மக்கள் யானைகளுக்கு, அச்சங்கொள்ள வேண்டி உள்ளதாகவும் வெடிகள் கொளுத்துகின்ற போதிலும், வெடிகளுக்கு அஞ்சாத யானைகள் கிராமத்தின் விவசாய முயற்சிகளை அழித்து வருவதாகவும், அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் வளர்க்கப்படும் யானைகள் புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம், பழையமுறிகண்டி, தென்னியங்குளம் ஆகிய கிராமங்களின் காடுகளில் இரகசியமாக இறக்கிவிடப்படுவதாகவும் மனிதர்களுடன் நன்கு பழக்கப்பட்ட யானைகள் மனிதர்களால் வெடியோசைகளையோ வேற்று ஒலிகளையோ எழுப்புகின்றபோது அவற்றுக்குப் பயப்படாது யானைகள் தொடர்ச்சியாக கிராமங்களில் அழிவுகளை ஏற்படுத்தி வருவதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .