2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’யாருக்காக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன?’

Editorial   / 2020 ஜூலை 27 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“வடக்கில், அபிவிருத்தி செய்தோம் என்று கூறுபவர்கள் யாருக்காக செய்தோம் என்பதை கூறுவார்களா?” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ச.அரவிந்தன் தெரிவித்தார். 

மயிலிட்டி பகுதி மக்களைச் சந்தித்து கலந்துரையாடியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கில் அபிவிருத்தி செய்தோம் என்று கடந்தகால அரசாங்கமும் அதில் இருந்தவர்களும் கூறிவருகின்றனரெனவும் ஆனால் செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைகளை தமிழ் மக்கள் பயன்படுத்தக் கூடியதாக உள்ளதா என்று யாராவது சிந்தித்தார்களா எனவும் வினவினார்.

“குறிப்பாக மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. அனால் எங்கள் கடற்றொழிலாளர் பயன்படுத்துகிறார்களா  என்றால் இல்லை. ஆனால் மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது என்பதே வெளிப்பாடு” எனவும், அவர் தெரிவித்தார்.

தமது கடற்றொழிலாளர் பயன்படுத்த முடியாத சூழலே உள்ளதெனத் தெரிவித்த அவர், தாம் அப்பகுதி மக்களைச் சந்திக்கின்ற போது, இந்த குறைபாட்டை கூறுகிறார்களெனவும் இவ்வாறே பல அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளதெனவும் கூறினார்.

“தமது பிரதேசங்களில் இடம்பெற்ற அபிவிருத்திகள் இவ்வாறே இடம்பெற்றுள்ளது. இத்தகைய அபிவிருத்திகள் தேவையா? இந்த அபிவிருத்திகள் யாருக்கானது என்பதே கேள்வி” எனவும், அவர் தெரிவித்தார்.

அபிவிருத்திக்கு நாங்கள் தடையில்லையெனத் தெரிவித்த அவர், ஆனால் இங்கு நடைபெறும் அபிவிருத்திகள் மக்கள் பயன்படுத்தும் விதத்தில் நடைபேறவேண்டும் என்பதே வேண்டுகோள் எனவும் கூறினார்.

இந்தக் கோரிக்கை எல்லோருக்குமானது மக்கள் இந்த விடயங்களில் கூடிய அக்கறை செலுத்தி தேர்தலின் போது சரியான முறையில் தமது வாக்குபலத்தைப் பயன்படுத்த வேண்டுமெனவும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X