2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வசிக்காத வீடுகளில் சட்டவிரோத செயற்பாடுகள்

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கரைதுறைபற்றில், குடும்பங்கள் வசிக்காத வீடுகளில் சட்டவிரோதச் செயற்பாடுகள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கரைதுறைபற்று பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று  (20) நடைபெற்ற போதே, பொது அமைப்புகளால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.

2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், பல நிரந்தர வீடுகள், பிரதேச செயலகப் பிரிவில் அமைக்கப்பட்டன என்றும் அமைக்கப்பட்ட பல வீடுகளில், குடும்பங்கள் வசிக்காத நிலையில் அவற்றில் சமூக சீர் கேடுகள், கசிப்பு உற்பத்திகள் நடைபெறுவதாகவும் இது தொடர்பாக பொது அமைப்புகளினால் கிராம அலுவலர்களுக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

எனவே, இதுபோன்ற குடும்பங்கள் வாழாத வீடுகளை அடையாளம் கண்டு, வீடுகளற்றவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் திரட்டிய விவரங்களின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டின் பின்னர் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில், 200க்கு மேற்பட்ட வீடுகளில், யாரும் வசிக்கவில்லை எனத் தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X