2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வயற்குடியிருப்பு வீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி

Editorial   / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்  

 

கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலமாக நெற்பரப்புக் காணிகளில் குடியிருந்த குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்களை அமைப்பதற்கான அனுமதியை, மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக்குழு வழங்கியுள்ளது. 

கிளிநொச்சி மாவட்டத்தில், நெற்பரப்புக் காணிகளில் நீண்டகாலமாக குடியிருந்து வருகின்ற குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட அனுமதிகளை வழங்குவதற்கு தடைகள் காணப்பட்டன. 

அதாவது, பயிர்செய்கை நிலங்களை மண்ணிட்டு மூடி கட்டடங்கள் அமைப்பதற்கான தடைகள் விதிக்கப்பட்டன. இருந்தும் சட்டவிரோதமாக சில இடங்களில் வயல் நிலங்கள் மூடப்பட்டு கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி ஆகிய பகுதிகளில் நீண்டகாலம் நெற்பரப்புக் காணிகளில் வாழ்ந்த குடும்பங்கள் வீட்டுத்திட்டப் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்ட போதும், அவர்களது காணி, நெற்பரப்புக் காணிகளாகக் காணப்பட்டதால், வீட்டுத்திட்டங்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்பட்டது. 

தற்போது, இவர்களுக்கான வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு, அதிகாரிகள் மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய, கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு, அவர்கள் வாழ்கின்ற பகுதியில் வீடுகளை அமைப்பதற்கான அனுமதியை, மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரியதையடுத்து, குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கண்டாவளைப் பிரதேசத்தில் 22 குடும்பங்களும் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் 17 குடும்பங்களும் பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் 06 குடும்பங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .