2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வருடாந்த பொங்கல் விழா

Editorial   / 2019 மே 13 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

வன்னி - விளாங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் இம்முறை நடைபெறவுள்ள வருடாந்த பொங்கல் விழாவில், பறவைக் காவடிகள், தூக்குக் காவடிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமாட்டாதென்று, கோவில் பரிபாலன சபை தெரிவித்துள்ளது.

வன்னி - விளாங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் விழா, வௌ்ளிக்கிழமை (17) நடைபெறவுள்ளது.

இதற்கமைய, வெள்ளிக்கிழமை (17) நண்பகல், விசேட அபிஷேகமும் அலங்கார பூசைகளும் நடைபெற்று, இரவு 09 மணியளவில், மடைப்பண்டம் எடுக்கப்பட்டு, பொங்கல் திருவிழா ஆரம்பமாகும்.

இந்த திருவிழா, மறுநாள் சனிக்கிழமை (18) அதிகாலை வரை நடைபெறும்.

இந்த வருடாந்த பொங்கல் விழாவுக்கு கலந்துகொள்ள வரும் பக்தர்களின் நலன் கருதி, இலங்கைப் போக்குவரத்துச் சபையின் முல்லைத்தீவு சாலையினரும் முல்லைத்தீவு மாவட்டத் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினரும் இணைந்து விசேட போக்குவரத்து வசதிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

அத்துடன், மாங்குளம், மல்லாவி ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த விசேட பொலிஸ் அணியினருடன் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து பாதுகாப்புக் கடமைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

அத்துடன், நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, கோவில் வளாகத்தில் வர்த்தக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், அடியவர்களின் நேர்த்திக்கடனாக மேற்கொள்ளப்படும் பறவைக் காவடிகள், தூக்குக் காவடிகளுக்கு இம்முறை வழமைபோன்று அனுமதி வழங்கப்பட்டமாட்டாதென்றும் ஏனைய காவடிகள் உட்பட அடியவர்களின் நேர்த்திக் கடன்கள் வழைமைபோல கோவில் வளாகத்தில் நடைபெறுமெனவும், கோவில் பரிபாலன சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .