2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘வழக்குகளுக்கான நீதி எங்கே?’

Editorial   / 2018 நவம்பர் 20 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கூறுவது போன்று, இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இருக்கின்றதென்றால், காணாமற்போனோர் தொடர்பில் நீங்கள் தாக்கல் செய்த வழக்குகளுக்கு என்ன நடந்ததென, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு, மாங்குளத்தில், நேற்று முன்தினம் (19) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். 

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இன்று, தென்பகுதி தலைமையைத் தெரிவுசெய்கின்ற விடயத்தில், கூட்டமைப்பினர் ஆர்வம் செலுத்தி, ரணிலை பதவிக்குக் கொண்டுவர விரும்புவதாகவும் ரணில், மைத்திரி, கூட்டமைப்பினர் கூட்டுச் சேர்ந்து தான், இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை இல்லாமல் செய்தார்கள் என்பதை, தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டுமெனவும் கூறினார். 

அத்துடன், சம்பந்தன் கூறுவது போல், இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இருக்கின்றதென்றால், காணாமற்போன உறவுகளைத் தேடுவதற்காக நீங்கள் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு என்ன நடந்ததெனக் கேள்வியெழுப்பிய அவர், காணாமற்போனோர் தொடர்பில் நீங்கள் தாக்கல் செய்த வழக்குகளுக்கான நீதி எங்கேயெனவும் வினவினார். 

சம்பந்தன் கூறுவது போன்று, நீதித்துறை சுயாதீனமாக இருந்தால், பொய் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் நிலைமை வந்திருக்காதென, அவர் மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .