2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் மாபெரும் யாகம்

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தமிழர் தாயக பிரதேசங்களில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், கடந்த யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியும் அவர்கள் தொடர்பான சிறந்த முடிவு கிடைக்க வேண்டுமெனவும், வவுனியாவில் மாபெரும் யாகம் இடம்பெற்றது.

வவுனியா தேடிவந்த பிள்ளையார் கோவிலில் சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாதக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற யாகத்தை சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சாம்பஸ்ரீ ஐயப்பதாசக் குருக்கள் நடத்தி வைத்திருந்தார்.

இன்று காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் யாகம், வழிபாடுகளில் வவுனியா அந்தணர் ஒன்றியம் குருக்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்,  சமூகஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X