2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’வவுனியாவில் விபசாரத்தால் எச்.ஐ.வி தொற்று’

க. அகரன்   / 2018 நவம்பர் 30 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வவுனியாவில் விபசாரத்தால் எச்.ஐ.வி தொற்று ஏற்படுகின்றது” என வவுனியா மாவட்ட பாலியல் நோய்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று (30) வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய் தடுப்பு பிரிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உலக எயிட்ஸ் தினம் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி உலகம் பூராகவும் நினைவுகூரப்படுகிறது. வவுனியாவில் பாலியல் நோய் தடுப்பு பிரிவு எயிட்ஸ் விழிப்புணர்வு செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 2003 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வவுனியாவில் 20 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 2018 ஆம் ஆண்டு ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதில் 7 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர்.

இந்த எச்.ஐ.வி மூன்று முறைகளில் வேகமாக பரவுகிறது. எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களுடனான பாலியல் ரீதியான தொடர்புகள், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களின் இரத்தம் பிறிதொரு நபருக்கு மாற்றுதல், எச்.ஐ.வி தொற்றுள்ள ஒரு தாய்க்குப் பிறக்கும் குழந்தை என்பவற்றின் ஊடாக வேகமாக பரவி வருகிறது.

ஆனால், வவுனியாவை பொறுத்தவரை விபசாரம் காரணமாக எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனை இனங்காண ஓன்று தொடக்கம் மூன்று மாதங்கள் தேவை. அந்த இடைவெளிக்குள் அவர்கள் மூலம் பலருக்கும் தொற்றி விடுகிறது” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .