2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் வீட்டுக்கடனை எதிர்த்து போராட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வீட்டுக் கடனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குடும்பமொன்று வீதிக்கு இறங்கி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தியுள்ளது.

இந்தச் சம்பவம், வவுனியாவில் இன்று (02) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா – அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றே, இவ்வாறு வீட்டுக் கடனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த குடும்பத் தலைவர், கடந்த 20 வருடங்களாக வீட்டுத்திட்டம் இன்றி இடம்பெயர்ந்து வசித்து வரும் தாம், வீடமைப்பு அதிகார சபையினரிடம் வீட்டுக்கடன் கோரப்பட்டு பெறப்பட்டதாகவும் இந்நிலையில் வீடு நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கடன் விண்ணப்பம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

காரணம் கேட்டால், ஐந்து இலட்சம் ரூபாய் வீட்டுக்கடனுக்கு 500சதுர அடி வீடே பெற்றுக்கொள்ள முடியுமெனவும் ஆனால் எனது அத்திவாரத்தின் அளவு 600சதுர அடியைக் கொண்டுள்ளதெனவும் அதிகார சபை தெரிவிப்பதாக, அவர் கூறினார்.

இந்நிலையில், எனது வீட்டுக்கு மேலதிகமாக வரும் செலவுகளை தானே பொறுப்பேற்பதாகத் தெரிவிக்கப்பட்டபோதும், அக்கடன்தொனை தனக்கு தரப்படவில்லையென அவர் தெரிவித்தார்.

இதன்போது, சம்ப இடத்துக்கு வருகைத் தந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் போராட்டம் மேற்கொண்ட குடும்பஸ்தருடன் கலந்துரையாடியதுடன், வவுனியா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் திருமதி வீ. எம். வீ. குறூஸ்சுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது மாவட்ட முகாமையாளர் தெரிவிக்கும்போது, வீட்டுக் கடன் வழங்கும்போது, கடன் உடன்படிக்கை விண்ணப்பப் படிவத்தில், 500 சதுர அடியில் வீடு அமைக்கப்பட வேண்டுமெனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு உடன்படுகின்றேன் எனத் தெரிவித்து குறித்த குடும்பஸ்தரால் ஒப்பமிடப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த வீடு 600 சதுர அடியைக் கொண்டுள்ளது. எனவே எமது சட்டத்துக்கு அந்த வீடு அமையவில்லை.

தற்போது இவருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டால், பலரும் என்னிடம் வந்து இதே நடைமுறையில் தமக்கு வீட்டுக்கடன் வழங்குமாறு கோரிக்கைகளை முன்வைப்பார்கள். எனவே அந்தக் கட்னை வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, குறித்த குடும்ஸ்தரின் கோரிக்கையை, கொழும்பு தலைமை அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று இரு தினங்களில் தீர்வுப் பெற்றுத்தருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .