2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வாய்க்கால் நீருக்குப் பூட்டு: 330 ஏக்கர் பாதிப்பு

Editorial   / 2020 மே 24 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சி - கோணாவில் பிரதேசத்தில், திருவள்ளுவர் கமக்கார அமைப்பின் கீழ், இரண்டு கமக்காரர்கள், எட்டு ஏக்கரில் அத்துமீறிய விதைப்பில் ஈடுப்பட்டமைக்காக, அவர்களைத் தண்டிக்கும் வகையில், அந்த வாய்க்காலூடாகச் செல்லும் நீர் பூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அப்பகுதி கமக்காரர்கள், இதனால், சுமார் 330 ஏக்கர் வரையான வயல் நிலங்கள் பாதிப்படைந்துள்ளன என்றும் கூறினர்.

சட்டத்தை மதிக்காது அத்துமீறய விதைப்பில் ஈப்பட்டுவர்களைத் தண்டிப்பதற்காக, சட்ட ரீதியாக விதைப்பில் ஈடுபட்ட பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வது கவலைக்குரியதெனவும், கமக்காரர்கள் கூறினர்.

இது தொடர்பில் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர்கள் உரிய பதிலை தரவில்லையென, கமக்காரர்கள் தெரிவித்தனர்.

நீர் முகாமைத்துவத்தைக் குழப்பும் வகையில், அந்தப் பகுதியில் இருவர் அத்துமீறிய விதைப்பில் ஈடுப்பட்டிருந்தனரெனத் தெரிவித்த நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ். செந்தில்குமரன், இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே, அந்த பிரதேசத்துக்கான நீர் செல்லும் வாய்க்காலைப் பூட்டியதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .