2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’வாய்க்கால்கள், வீதிகளை புனரமைக்கவும்’

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், பாரிய குளங்களில் ஒன்றான வவுனிக்குளத்தின் நீர்ப்பாசன மற்றும் கழிவு வாய்க்கால்கள், விவசாய வீதிகள் என்பவற்றை  புனரமைத்து தருமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றாகக் காணப்படுகின்ற வவுனிக்குளத்தின் கீழ் 6,060 ஏக்கர் நிலப்பரப்பில் 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முற்பது ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாத இருந்த குளத்தின் புனரமைப்புப்பணிகள் கடந்த மீள்குடியேற்றத்தின் பின்னர் முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்கின்ற கருத்திட்டத்தின் கீழ் 600 மில்லியன் ரூபாய் செலவில் குளத்தின் புனரமைப்புப்பணிகளும் ஏனைய முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பிரதான மற்றும் நீர்ப்பாசனக் கால்வாய்களும் புனரமைக்கப்பட்டன.

அத்துடன், செயலிழந்து காணப்பட்ட  ஏற்று நீர்ப்பாசனத் திட்டங்களும் மீள்புனரமைப்பு செய்யப்பட்டன.

இதன்மூலம் 6,060 ஏக்கர் நெற்செய்கையும் 1,325 ஏக்கர் மேட்டுநிலச் செய்கையும் மேற்கொள்ளக்கூடிய வகையில் குளம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

இருந்தபோதும், இக்குளத்தின் கீழான பிரதான நீர் விநியோகவாய்க்கால்களின் சில பகுதிகளும் கிளைவாய்க்கால்கள் நீர்ப்பாசன வீதிகள் புனரமைக்கப்படாது இருக்கின்றன.

எனவே, இவற்றைப் புனரமைத்துத் தருமாறு இப்பகுதி விவசாயிகள் விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .