2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘விசேட துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படும்’

Editorial   / 2018 ஜூன் 21 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

வடக்கு மாகாணத்தில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, தனது அலைபேசி இலக்கம் மற்றும் பொலிஸ் நிலையத் தொலைபேசி இலக்கங்கள் பொறிக்கப்பட்ட விசேட துண்டுப்பிரசுரங்கள், விரைவில் விநியோகிக்கப்படுமென, வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

சர்வதேச யோகா தின நிகழ்வுகள், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில், இன்று (21) நடைபெற்றன. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

வட மாகாணத்தில், அதிகளவான விசேட தேவையுடையோர் வாழ்கின்றனரெனவும் இங்கு, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசேட தேவையுடையோர் காணப்படுகின்றனரெனவும் கூறினார்.

எனவே, இவ்வாறானவர்களுக்கு, மாகாணம் தழுவிய ரீதியில் யோகாப் பயிற்சிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமென, அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .