2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘வித்தியாசமான பயிர்செய்கைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் மாற வேண்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

சமூகப்பொறுப்பு நிதியான இந்தக் காற்றலை நிதி தொடர்பாக வடமாகாண சபையில் விவாதித்த விவாதங்கள் தான், இன்று நீதிமன்றத்தில் ஒரு நீதியரசரை குற்றவாளிக்கூண்டில் நிற்கக்கூடிய துரதிஷ்டவசமான சம்பவம் என்று வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில்அமைந்துள்ள பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்துரையாற்றுகையில், வித்தியாசமான பயிர்செய்கைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் மாறவேண்டுமென்றும், நீரை வினைத்திறனுடன் பயன்படுத்தி அதி உச்ச விளைச்சல்களை பெறக்கூடிய விவசாய முறைகள் தற்போதுள்ளவெனவும்​ தெரிவித்தோடு, இந்நக்காற்றலை மின் உற்பத்தி நிறுவனத்தின் நிதியின் கீழ் 47 பயனாளிகளுக்கு கிணறுகள் அமைப்பதற்கான காசோலைகள் வழங்கப்பட்டிருக்கின்றனவென மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .