2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வில்பத்துக்கு இராஜாங்க அமைச்சர் விஜயம்

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

முசலி பிரதேசத்துக்கு இன்று (24) விஜயம் செய்திருந்த மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, வில்பத்து பகுதிக்கும் சென்று, வனவளபாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டார்.

இராஜாங்க அமைச்சருடன்,  கொழும்பிலிருந்து  வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர். அவர்களுடன்,  முசலி வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் இணைந்துகொண்டனர்.

மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மரிச்சிக்கட்டி, பாலைக்குழி மற்றும் கரடிக்குழி உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்ட அக்குழுவினர், கல்லாறு  அமைச்சுக்குளத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கைத்தொழில் பேட்டைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட்டனர். விளாத்திக்குளம் பகுதியில் வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட காணியையும் அக்குழுவினர்  பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .