2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘விவசாய அமைப்புகள் பலமாக இருக்க வேண்டும் ‘

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 செப்டெம்பர் 28 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவசாய அமைப்புகள் மக்கள் பலம் பொருந்திய அமைப்புகளாக இருக்கவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே. ஆயகுலன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள கமக்கார அமைப்புகள் இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. குறிப்பிட்ட சில அமைப்புகள் முறையற்ற விதத்தில் செயற்பட்டு வருகின்றன. இதனால் பல விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் இவ்வாறு நீண்ட காலமாக இருந்து செயற்பட்டு வரும் கமக்கார அமைப்புகள் புனரமைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலனிடம் வினவியபோது,

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அக்கராயன், முழங்காவில், இராமநாதபுரம், பூநகரி, பளை, புளியம்பொக்கணை, உருத்திரபுரம், கிளிநொச்சி ஆகிய கமநல சேவை நிலையங்களின் கீழ் 121 கமக்கார அமைப்புகள் காணப்படுகின்றன. இதில் 75 வரையான கமக்கார அமைப்புகள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன. ஏனைய அமைப்புகளையும் புனமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்keனவே புனரமைக்கப்பட்ட அமைப்புகளில் நிர்வாகத் தெரிவுகளை மேற்கொள்வதற்கு விவசாயிகளின் வரவுகள் மிக மிக குறைவாகவே காணப்பட்டுள்ளது. குறிப்பாக, சின்னப்பல்லவராயன்கட்டு பகுதியில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ள போதும், அமைப்புகளை புனரமைப்பதற்கான கலந்துரையாடலில் 10 வரையான விவசாயிகளே கலந்து கொண்டனர்.

எனவே, விவசாயிகள் மட்டத்திலும் ஒரு விழிப்புணர்வு தேவையென்பதுடன், விவசாயிகள் முழுமையாகக் கலந்துகொண்டு, ஐனநாயக ரீதியான முறையில் அமைப்புகள் தெரிவு செய்யப்பட்டு, மக்கள் பலம் பொருந்திய அமைப்புகளாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், ஏனைய அமைப்புகளை தெரிவு செய்வதற்கான நடடிவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன.தற்போது காலபோக செய்கை மேறகொள்ளப்பட்டு வருவதனால் இதற்கான உரமானிய கொடுப்பனவுகள் தொடர்பிலான பதிவுகளை ஏற்கெனவே உள்ள  அமைப்புகள் மூலம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அதன் பின்னர் ஏனைய அமைப்புகளும் தெரிவு செய்யப்படவுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .