2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விவசாயப் பண்ணைக்குச் சொந்தமான காணியை சுவீகரிக்க, எதிர்ப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.அகரன்

“வவுனியா விவசாய விதை உற்பத்தி பண்ணைக்குச் சொந்தமான காணியை மத்திய அரசாங்கம் சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக” விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஏ-9 வீதியில் அமைந்துள்ள குறித்த காணி, வடமாகாண விவசாய அமைச்சின் பராமரிப்பில் உள்ளது.

இந்நிலையில், “வவுனியா புதிய பஸ் நிலையத்தை அமைப்பதுக்காக குறித்த பண்ணையில் சுமார் 3 ஏக்கர் காணி 2012 ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்டு புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

இதனையடுத்து, புதிய பஸ் நிலையத்தைச் சூழ வர்த்தக நிலையங்களை அமைத்து தர வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,  புதிய கடைத்தொகுதியை அமைப்பதுக்கு விவசாய விதை உற்பத்தி பண்ணையில் இருந்து மேலும் காணிகளை சுவீகரிக்க வடமாகாண சபையினூடாக மத்திய அரசாங்கம் முனைப்பு காட்டி வருகின்றது.

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதுக்காக குறித்த பண்ணையில் காணியை கோரியபோது வடமாகாண முதலமைச்சர் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது கடைத்தொகுதி அமைப்பதுக்கு காணியை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .