2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வீடுகளைக் காட்டி பொய் பிரசார நடவடிக்கை

Editorial   / 2018 ஜனவரி 04 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி மாவட்டத்தில், உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், கிராமங்களில் பொய்யான பரப்புரைகளில் ஈடுபடுவதாக, கிராம மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“நிரந்தர வீடுகள் வழங்குகின்றோம், எமக்கு வாக்களியுங்கள். இம்மாதம் 10ஆம் திகதிக்குள் அத்திவாரத்துக்கான பணத்தை தருகின்றோம். மிகுதிப் பணம் தேர்தலில் வென்றப் பின்னர் தருகின்றோம் என, பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர்.

“கடந்த ஏழு ஆண்டுகளாக நிரந்தர வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்களிடம் அலைந்து திரிந்த கூட நிரந்தர வீடுகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், பிரதேச சபைகளுக்குப் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் எப்படி வீடுகளைப் பெற்றுத் தருவார்கள். பிரதேச சபைகளால் எங்களுக்கு வீடுகளை வழங்க முடியுமா. இவ்வாறு பொய்யான பரப்புரைகளில் ஈடுபட்டு எம்மை ஏமாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X