2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வீதி தற்காலிகப் புனரமைப்பு

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயனில் இருந்து ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம், ஜெயபுரம் வரையான கிராமங்களுக்கான வீதி தற்காலிகப் புனரமைப்பு வேலைகள் நடைபெறுகின்றன.

வன்னேரிக்குளத்தின் வீதி 63 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட நிலையில் குறித்த வீதியினை புனரமைக்குமாறு தொடர்ச்சியாக இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்த நிலையிலும் கடந்த 20 நாள்களுக்கு மேலாக தற்காலிகப் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இயந்திரத்தின் உதவியுடன் இருபக்க வீதியும் வெட்டப்பட்டு நடுவீதியில் மண் குவிக்கப்பட்டு வீதியோரங்களில் கிரவல் மண் குவிக்கப்பட்டு வேலைகள் நடைபெறுகின்றன.

கடந்த அறுபது ஆண்டுகளாக வன்னேரிக்குளம் கிராம மக்கள் நிரந்தரமாக வீதியைப் புனரமையுங்கள் என்றால் மக்களின் கொதி நிலையைத் தவிர்ப்பதற்காக தற்காலிகப் புனரமைப்பு வேலைகளே குறித்த வீதியில் இடம்பெறும்.

வன்னேரிக்குளத்தின் வீதி எப்போது நிரந்தர வீதியாக மாற்றப்படும் என அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் இக்கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X