2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீதியை நிரந்தரமாகப் புனரமைக்கவும்

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - பூநகரி முக்கொம்பன் வீதியை நிரந்தரமாகப் புனரமைக்குமாறு முக்கொம்பன் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கொம்பன் கிராமத்தில் இருந்து ஸ்கந்தபுரம் நோக்கிச் செல்லும் நான்கு கிலோமீற்றர் வீதியே புனரமைக்கப்படாமல் உள்ளது. அக்கராயனில் இருந்து முக்கொம்பன் பூநகரி வழியாக இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் ஒன்று யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கின்றது.

தனியார் போக்குவரத்து பஸ்களும் முக்கொம்பன் கிராமத்துக்கு பயணிக்கின்றன. குறித்த நான்கு கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்படுமானால் அக்கராயனில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான சிறந்த போக்குவரத்து வீதி உருவாகும்.

அக்கராயன், பூநகரி பிரதேச மருத்துவமனைகளுக்கும் பூநகரி பிரதேச செயலகம், கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கிளிநொச்சி பொது மருத்துவமனை, கிளிநொச்சி நகரத்திற்கான தேவைகளுக்குச் செல்லும் மக்களுக்கான போக்குவரத்துக்கு குறித்த நான்கு கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்படுவது அவசியமாகின்றது.

கடந்த பத்தாண்டுகளாக நிரந்தர வீதியாக புனரமைக்கும்படி இக்கிராம மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது குறித்த வீதி பெருங்குன்றுங்குழியுமாக மாறியுள்ளது.

இதேவேளை அக்கராயன் மகா வித்தியாலயத்துக்குச் செல்லும் முக்கொம்பன், கண்ணகைபுரம் கிராமங்களின் மாணவர்களின் போக்குவரத்துக்கு இவ்வீதி புனரமைக்கப்படுவது அவசியமாகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .