2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’வெடிபொருட்களால் சவாலான பகுதியாக முகமாலை உள்ளது’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில், வெடிபொருட்கள் தற்போது அகற்றப்பட்டு வரும் பிரதேசம் மிகவும் சவால் நிறைந்த பிரதேசமாக காணப்படுவதாக கண்ணிவெடிகளை அகற்றும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, முகமாலைப் பகுதியில் யுத்த காலத்தின்போது புதைக்கப்பட்ட வெடிபொருட்களை அகற்றும் பணிகள், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளில் தற்போது வெடிபொருட்களை அகற்றும் பகுதியானது, மிகவும் ஆபத்தும் சவால் நிறைந்த பகுதியாகவும் காணப்படுகின்றது என கண்ணிவெடிகளை அகற்றும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள, இத்தாவில், முகமாலை, வேம்பொடுகேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் வெடிபொருட்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முகமாலைப்பகுதியில் மிகவும் ஆபத்தான முறையில் அதிகளவான வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளன. நீண்ட காலம் பழுதடையாத வெடிபொருட்களால் இதுவரை பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் பலர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

யுத்தகாலத்தில் முன்னரங்க நிலையாக காணப்பட்ட இப்பகுதிகளில் உள்ள மண் அணைகள், கைவிடப்பட்ட காவலரண்கள் என்பவற்றில் அதிகளவான வெடிபொருள் ஆபத்துக்கள் காணப்படுகின்றன.

நன்கு பயிற்சி பெற்று நீண்ட காலம் பணிகளில் ஈடுபட்டு வரும் கண்ணி வெடி அகற்றும் அணியினருக்கே இப்பகுதி மிகவும் சவால் நிறைந்த பகுதியாக காணப்படுவதாகவும் கண்ணிவெடிகளை அகற்றும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .