2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’வெடிபொருள்களை அகற்றி விரைவாக மீள் குடியமர்த்தவும்’

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - முகமாலை பகுதியில், வெடிபொருள் அகற்றப்படாத பிரதேசங்களில், வெடிபொருள்களை அகற்றி, விரைவாக மீள் குடியமர்த்துமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகமாலை, இத்தாவில்,  கிளாலி, வேம்பெடுகேணி  ஆகிய பிரதேசங்களில், இதுவரை நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத நிலையில் இருப்பதாகவும், இதனால், குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக வெளியிடங்களிலும்  வாடகை வீடுகளிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும், அப்பகுதி மக்கள் கூறினர்.

முகமாலை, கிளாலி, இத்தாவில், வேம்பெடுகேணி ஆகிய பிரதேசங்கள் ஆபத்து நிறைந்த பகுதிகளாக காணப்படுகின்றன. இந்தப் பிரதேசங்களில், தற்போது வெடிபொருள் அகற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .