2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வெளிமாவட்ட மீனவர்களால் வாழ்வாதாரம் பாதிப்பு

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்தும் வெளிமாவட்ட மீனவர்களின் தொழில்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத் தொழில்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், இந்தப் பிரதேசங்களில் காலத்துக்கு காலம் வெளிமாவட்ட மீனவர்களின் வருகையும் அவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற  நிபந்தனை மீறிய தொழில்களாலும்  தமது வாழ்வாதாரத் தொழில் முழுமையாகப் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, வலைஞர் மடம் போன்ற பகுதிகளில் வாழும் 80 சதவீதமான குடும்பங்கள் கடற்றொழிலை வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ளதுடன், இப்பிரதேசத்தில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் கரையோரப் பிரதேசங்களில் கிடைக்கின்ற தொழில்வாய்ப்பை வைத்தே தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றனர்.

மேற்படி சட்டவிரோத தொழில்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, பிரதேச மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X