2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வைக்கோலை எரித்தால் கடும் நடவடிக்கை

Editorial   / 2019 மார்ச் 11 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், அறிவுறுத்தல்களை மீறி, பயிர்ச்செய்கை நிலங்களில் காணப்படும் வைக்கோல்கள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டு வருவதாகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான தீமூட்டல் சம்பவங்கள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், இறுக்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென, கமநல சேவை நிலையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில், காலபோக நெல் அறுவடை நிறைவுபெற்று, சிறுபோகப் பயிர்ச் செய்கைக்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காலபோக அறுவடையின் பின்னர் காணப்படும் வைக்கோல்கள், விவசாயிகளால் எரியூட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறு, வைக்கோல்களை எரியூட்டும் விவசாயிகளுக்கான மானிய கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படாதென்றும் இவ்வாறு எரியூட்டும் விவசாயிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், கமநலசேவை நிலையங்களால், கமக்கார அமைப்புகள் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த போதும், கமக்கார அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களே, இவ்வாறு வைக்கோலைகளை எரியூட்டி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

குறிப்பாக, வைக்கோல்களை எரியூட்டியுள்ள விவசாயிகள் தொடர்பான விவரங்களை, ஒவ்வொரு கமக்கார அமைப்புகளில் இருந்தும் கோரிய போதும், இதுவரை அந்த விவரங்கள், உரிய கமநலசேவை நிலையங்களுக்குக் கிடைக்கபெறவில்லையென, கமநலசேவை நிலையங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, இனிவரும் காலங்களில், வயல்களில் காணப்படுகின்ற வைக்கோலைகளை எரியூட்டுபவர்களுக்கு எதிராக, இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும், கமநலசேவை நிலையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .