2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இந்தவார பலன்கள் (09.11.2014 - 15.11.2014)

A.P.Mathan   / 2014 நவம்பர் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தவார பலன்கள் (09.11.2014 - 15.11.2014)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
தன்னை சார்ந்தவர்களுடன் ஒளிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே..! 
 
இந்த வாரம் நீங்கள் வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி லாபம் அதிக அளவில் கிடைக்கப்பெறுவீர்கள்.   நல்லவர்களுடைய சேர்க்கைகள் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் மகிழ்ச்சி காணப்படும். மனதிற்கு பிடித்தமான விஷயங்களில் அதிக அளவில் ஈடுபடுவீர்கள். வார இறுதியில் மனதில் விரக்தி உண்டாகும். உணவில் வெறுப்பு ஏற்பட்டும்  அலைச்சல் அதிகரிக்கும் வீணாண மருத்துவ செலவுகள் காணப்படும். முயற்ச்சிகள' தடைபடும் பணத்திற்குதட்டுப்பாடுகள் காணப்படும். எனவே கவனமாக இருப்பது அவசியமாகும். 
 
அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
 
இடபம் 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் உங்களுக்கு வீண் அலைச்சல்கள் மற்றும் வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் மற்றும் செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் தோன்றும். எனவே நிதானம் தேவை. தலைவலி  மற்றும்  பிரயாணங்களினால் உடல் சோர்வு மற்றும் மனதளவில் பயம் உண்டாகும். வார இறுதியில் குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித்தரும். பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு மனதில் மகிழ்ச்சி கொள்வீர்கள். உறவினர்களிடையே அன்யோன்யம் கூடும்.
 
அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!
            
இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில்  நல்ல முன்னேற்றம் மற்றும் அதிக அளவில் லாபங்கள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.  முயற்ச்சி செய்தால் காரியங்களில் வெற்றி பெறலாம்.இல்லத்தில் உள்ள பெண்களால் சுபகாரியங்கள் உண்டாகும்.  அரசினரால் தனலாபங்கள் கிடைக்கப்பெறும்.  வார இறுதியில் பெண்களுடன்  வீணான விவாதங்களை தவிர்க்கவும ;உடல் நிலையில் சோர்வு மற்றும் வீண் சிரமங்கள் மேலும் மனதில் பதட்டநிலை ஆகியவை  காணப்படும். 
 
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும். தீயவர்களின் நட்பினால் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும்.  சிலவிதமான சிக்கல்கள் மற்றும் வேண்டாத பேச்சுக்களால் மனக்கசப்புகள்  தோன்றும்.குடும்பத்தாரிடம் நீங்கள் எதிர்பார்த்த  உதவிகளை கிடைக்கப்பெறுவீர்கள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது  உத்தமம். பணியிடத்தில் போட்டிகள் காணப்படும். எந்த ஓரு செயலையும் மன திருப்தியுடன் செய்ய இயலாது. எனவே தியானம் மற்றும் ஆலய தரிசனங்கள் செய்து வந்தால் மனதை ஒருநிலைப்படுத்தலாம்.
 
அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் அரசினரால் தனலாபங்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் வருகையினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல இனிமையான உறக்கங்கள் கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.  வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்லும் சூழ்நிலைகள் உருவாகலாம். தீய நட்பினை தவிர்த்தால் தேவையில்லாத நஷ்டங்களை தவிர்க்கலாம்.  குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும் ஆலய தரிசனங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.  இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 12
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்
 
 
கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவார தொடக்கத்தில் உங்களுக்கு நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகள் கிடைக்கும் நல்லவர்களுடைய சேர்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும்  தனலாபங்கள் உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். இசையில் ஆர்வம் அதிகரிக்கும் அதனால் மனதில் மகிழ்ச்சி  ஏற்படும்.  வார இறுதியில் தேவையில்லாத செலவுகள் வீணான சிரமங்கள் காணப்படும்.  எதிர்பார்பு தடைபடும். வியாபாரத்தில் சிறு நஷ்டம் உண்டாகும். சிலவிதமான சிக்கல்கள் உருவாகும் .மனதளவில் கஷ்டங்கள் தோன்றும்.
 
அதிர்ஷ்ட திகதி : 09 
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள். 
 
தேடி சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் எந்த செயலையும் சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. உங்களின் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். பாக்கிகள் நிலுவையின்றி வசூலாகும். விலையுயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாள்வது அவசியமாகும்.கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அகலும். தொல்லை தந்தவர்கள் விலகுவார்கள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். உங்கள் மனதில் புத்துணர்வும் செயல்களில் திறமையும் அதிகரிக்கும். வெகுநாட்களாக தேடிய பொருட்கள் கிடைக்கும்.  உறவினர்களிடையே உறவு பலப்படும்.
 
அதிர்ஷ்ட திகதி : 14
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே எடுத்த காரியத்தை முடிக்ககூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கம் உங்களுக்கு வியாபாரத்தில் பிரச்சனை ஏற்பட்டு பகை உண்டாகும். காரியங்கள் தடைபடும் வீண் அலைச்சல்கள்  உண்டாகும் தவிர்க்க  முடியாத சில வீண் செலவுகள் காணப்படும் . மனக்கசப்புகள் உண்டாகும்.  வார தொடக்கம் உங்களுக்கு சங்கடங்களை கொடுத்தாலும் வார இறுதியில் மகிழ்ச்சி நிலவும் வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள் . லாபங்கள் அதிக அளவில் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் காரியங்களில் வெற்றி உண்டாகும்.  பொன் பொருள் சேர்க்கை ஆகியவை கிடைக்கும்.  
 
அதிர்ஷ்ட திகதி : 13
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள் 
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் அரசாங்க சம்பந்தப்பட்ட  காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும்.  சிறு சிறு உபாதைகள் காணப்படும். கவனத்துடன் இருப்பது அவசியமாகும். இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும் மகான்களின ஆசிர்வாதம் கிடைக்கும் . நல்ல நண்பர்களின் உறவுகள் கிடைக்கும்; மனதில் மகிழ்ச்சி உருவாகும். வார இறுதியில்மனதளவில் மகிழ்ச்சிகள் இருந்தாலும் உடலளவில்  அலைச்சல்கள் ஏற்படும்.  குடும்பத்தார் இடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.பிறருடைய உதவியை எதிர்பார்க்க வேண்டி வரும். வீணாண மனக்கஷ்டங்கள் தோன்றும். 
 
அதிர்ஷ்ட திகதி :14
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் உங்களுக்கு  மனதில் குழப்பமான சூழ்நிலையே நிலவும். பெண்களுடன் வீண் விவாதங்களே உண்டாகும் எனவே பொறுமையை கடைபிடிப்பது அவசியமாகும்.
சில துக்கமான சூழ்நிலைகள் நிலவும் செய்யும் காரியங்களில் சிறு தவறுகள் நடைபெறும். முயற்ச்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் தோல்வியில் முடியும். அலைச்சல்கள் காணப்படும் பணத்திற்கு தட்டுப்பாடுகள் காணப்படும் .  இருந்தாலும் ஒரு சில இடங்களில் வெற்றிகள் கிடைக்கும். பயணங்களில் கவனம் அவசியமாகும். எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். வார தொடக்கம் சுமாராக இருந்தாலும் இறுதியில் மகிழ்ச்சியாகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாவீர்கள்.ஆதாயம் இல்லாத அலைச்சல்கள் ஏற்படலாம். விரயங்கள் அதிகரிக்கும் . உங்களின் தன்மானத்திற்கு சிறு சோதனைகள் வரலாம். மனதில் பொறுமை  நேர்மை குணங்களை பின்பற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். ஆனாலும் பொருள் வரவிற்கு அஸ்திவாரமிடுவீர்கள். புதியவர்களின் சந்திப்பால் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். தொழிலில் சில மாற்றங்கள் உருவாகலாம். அனுபவம் மிக்கவர்களைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. 
 
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
 
 
மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
 
தனகென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் மனதில் உற்சாகம் பிறக்கும். வீடு மனை வாகன வகையில் ஆதாயம் உண்டாகும்.எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். தர்ம சிந்தனை வளரும். பொருள் திரட்டுவதில் ஆர்வம் கூடும். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்கான திட்டப் பணிகள் பலன் தரும். பயணத்தின் போது கவனம் அவசியம். தொழில் ஏற்ப்பட்ட போட்டிகள் அனைத்தும் விலகும்.
 
அதிர்ஷ்ட திகதி :  14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .