2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இங்கிலாந்து நாடாளுமன்றில் மகாத்மா காந்தி

George   / 2014 நவம்பர் 10 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவில் இருந்து காந்தி நாடு திரும்பியதன் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில்; 10 கோடி ரூபாய் செலவில் காந்தி சிலை அமைக்கப்படுகின்றது.

இந்த சிலையின் வடிவம் பொது மக்கள் பார்வைக்காக ஞாயிற்றுக்கிழமை(09) திறக்கப்பட்டதுடன் தற்போது களிமண்ணால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை வெண்கலத்தில் வார்க்கப்படுகிறது.

இச்சிலை இந்திய ரூபாய்.10 கோடி செலவில் வடிவமைக்கப்படுவதுடன் இதற்கான ஏற்பாடுகளை லண்டன் வாழ் இந்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

வழமையான, தடி ஊன்றிய காந்தி சிலை போல் அல்லாமல், 1931 ஆம் ஆண்டு காந்தி, லண்டனுக்கு வந்த போது, பிரதமர் அலுவலகம் முன்பு எடுக்கப்பட்ட நிழல்படத்தில் இடம்பெற்றுள்ள அவரது முழு உருவ தோற்றம் கொண்டதாக இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X