2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகின் அதிக விஷ எதிர்ப்பு மனிதர்

Editorial   / 2018 மார்ச் 29 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொடிய விஷம் கொண்ட கருப்பு மாம்பா பாம்பினை, தனது கையில் கடிக்க வைத்து, தான் ஒரு அதிக விஷ எதிர்ப்பு கொண்ட மனிதர் என்று நிரூபித்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பாம்பு ஆராய்ச்சியாளர் டிம் ஃபிரைட்.

உலகில் 3000 வகைப் பாம்புகள் இருக்கின்றன. அந்த வகையில் நாகப்பாம்பு மற்றும் கறுப்பு மாம்பா போன்றவை அதிக விஷம் கொண்டவை என அறியப்படுகின்றது.

இந்நிலையில், கருப்பு மாம்பா எனும் அதிக விஷம் கொண்ட பாம்பை, தேடிக் கண்டுப்பிடித்து கடிக்க வைத்துள்ளார் ஒரு மனிதர். அதாவது, கடித்த 15 நிமிடத்தில் மரணத்தை ஏற்படுத்தும் கொடிய விஷம் கொண்ட கருப்பு மாம்பா பாம்பினை கடிக்கவைத்து சாகசம் செய்துள்ளார்.

அவர் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தைச் சேர்ந்த டிம் ஃபிரைட் என்பவரேயாவார். பாம்புகளைப் பற்றி ஆராய்ச்சி நடத்தி வரும் இவர், இயற்கையிலேயே அதீத நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவராம். தன்னை சுயபரிசோதனை செய்யும் வகையில் அதிக விஷம் கொண்ட ஆபிரிக்காவின் கருப்பு மாம்பா என்ற பாம்பினை, தன்னைக் கடிக்க வைத்து காட்டியுள்ளார். இதன் மூலம் அதிக விஷ எதிர்ப்பு கொண்ட மனிதர் என்று அவர் தன்னை நிரூபித்துள்ளார்.

மாம்பா வகை பாம்புகள் கடித்தால் அடுத்த 15 நிமிடங்களில் மனிதன் இறந்து போக வாய்ப்புள்ள நேரத்தில், டிம் ஃபிரைட், மறுநாள் வழக்கம் போல் தனது அலுவலகப் பணிகளை மேற்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 17 ஆண்டுகளாக இவர் பாம்புகளை கடிக்க வைத்து சாதனை செய்து வருகிறார். ஏன் இப்படி பாம்புகளுடன் விளையாட்டு என்று கேட்டால், தன்னுடைய நோக்கம் பாம்புகளைப் பற்றியும், விஷ எதிர்ப்பு பற்றியுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் என்கிறார் சிரித்துக்கொண்டே.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .