2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகின் மிக இருண்ட கட்டிடம்!

Editorial   / 2018 மார்ச் 27 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிக இருட்டான கட்டிடம் தென் கொரியாவில், மக்கள் பார்வைக்காக  திறந்து வைக்கப்பட்டுள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக, ‘ஹூண்டாய் மோட்டார் நிறுவனம்’ சார்பில் இலண்டன் கட்டிடக்கலை நிபுணர்களைக் கொண்டு இந்த வித்தியாசமான கட்டிடத்தை வடிவமைத்துள்ளனர்.

தூய்மை மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை குறிக்கும் வகையில் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தனித்துவமான அம்சத்தை கொண்டுள்ள இந்த கட்டிடம் 99% சூரிய ஒளியை உறிஞ்சும் தன்மையை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடமானது, மில்லியன் கணக்கான கார்பன் நானோ குழாய்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் தலைமுடியை விட சுமார் 3,500 மடங்கு மெல்லியதாக உள்ள சிறிய நானோ குழாய்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளமை இந்த கட்டிடத்தின் சிறப்பம்சமாகும்.

இந்த நானோ குழாய்கள் ஒவ்வொன்றும் 14 மற்றும் 50 மைக்ரான் நீளத்தை கொண்டதாகும். அதாவது ஒரு மைக்ரான் 0.001 மில்லி மீற்றர் ஆகும். சூரிய ஒளி நானோ குழாய்களில் பிடிக்கப்பட்டு கட்டிடத்தில் இருந்து வெப்பமாக வெளியிடப்படுகிறது. ‘VantaBlack VBx2’என்றழைக்கப்படும் ஒரு புதிய மற்றும் தனித்துவமான பொருளை கொண்டு, இந்தக் கட்டிடம் முழுவதுமாக மூடப்பட்டிருக்கிறது.

இந்த தனித்துவமான பொருள் அதன் மேற்பரப்பில் பாயும் ஒளியை சுமார் 99 சதவீத அளவுக்கு உறிஞ்சும் திறன் கொண்டது. இந்த (VantaBlack VBx2) பொருள் தான், பிரபஞ்சத்தின் மிக கறுப்பான பொருள் என்றும் இதன் அருகில் சென்றால் நாமே மறைந்து விடுவோம் எனவும், இதன் உரிமத்தை வாங்கியுள்ள அனீஸ் கபூர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கட்டிடத்தில் சிறிது சிறிதாக ஆயிரக்கணக்கில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை பார்த்தல் பூமியிலிருந்து வானில் நட்சத்திரங்களை பார்ப்பதை போல் தெரியுமாம். மேலும் விண்வெளியில் மிதப்பதை போன்ற உணர்வையும் ஏற்படுத்தும் என இந்த கட்டிடத்தின் வடிவமைப்பாளர் அனீஸ் கபூர்  மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X