2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலகின் மிக வயதான சிலந்தி மரணம்!

Editorial   / 2018 மே 06 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிக வயதான சிலந்தி என்றுஅறியப்பட்ட“ வைல்ட் டிராப்டோர்” வகை சிலந்தியானது, தனது 43 ஆவது வயதில் ​ஆஸ்திரேலியாவில் உள்ள ஆய்வகம் ஒன்றில் மரணமடைந்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலியாவின், கர்டின் பல்கலைக்கழக பூச்சியியல் துறையின் பேராசிரியர் லிண்டா மாஸன், செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியிருப்பதாவது,

”கடந்த 1974 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியில் உள்ள வீட்பெல்ட் பகுதியில் இருந்து, இந்த சிலந்திப்பூச்சியைக் கண்டுபிடித்தோம். இதை ஆய்வாளர் பார்பரா கொண்டு வந்து ஆய்வகத்தில் பாதுகாத்து வந்ததுடன் சிலந்திப்பூச்சிகளின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து வந்தார். இது காடுகளில் வாழக்கூடிய வைல்ட் டிராப்டோர் வகையாகும். ஆய்வகத்தில் இதற்கு “நம்பர்-16” என்று பெயரிடப்பட்டது.

இவ்வகை சிலந்திப்பூச்சிகளை அவுஸ்திரேலியாவில் பெரும்பாலான இடங்களிலும், பூங்காக்களிலும் வளர்ந்த மரங்களிலும் காணமுடியும். இந்த வகை சிலந்திப்பூச்சிகளின் பொதுவான குணநலன்கள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக, “நம்பர்-16” என்று பெயரிடப்பட்ட இந்த சிலந்திப்பூச்சி பயன்படுத்தப்பட்டது.

எங்களுக்குத் தெரிந்தவரை நம்பர்-16 என்று பெயரிடப்பட்ட சிலந்திப்பூச்சிதான் உலகிலேயே பதிவு செய்யப்பட்டதில், மிகவும் வயதான சிலந்திப்பூச்சியாக இருக்க வாய்ப்புள்ளது.

திடீரென்று ஏற்பட்ட ஒருவிதமான ஒவ்வாமை நோய் காரணமாக இந்த சிலந்திப்பூச்சி இறந்துள்ளது. வழக்கமாக ட்ராப்டோர் வகையான சிலந்திகள் 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை மட்டும் உயிர்வாழும் தன்மை கொண்டவை. நாங்கள் ஆய்வகத்தில் வைத்துப் பராமரித்ததால், இது 43 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து வந்தது.

இதற்கு முன்பு மெக்சிகோ நாட்டில் 28 வயதான டிரான்டுலா எனும் சிலந்திப்பூச்சியே நீண்ட நாட்கள் உயிரோடு வாழ்ந்த சாதனையைப் படைத்திருந்தது. அதை நம்பர்-16 என்று பெயரிடப்பட்ட இந்த சிலந்திப்பூச்சி முறியடித்து விட்டமை குறிப்பிடத்தக்கதாகும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .