2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பறந்து வந்த புறா சிக்கியது

Editorial   / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பறவைகள் பறந்துவரலாம். ஆனால், பறந்துவந்து, ஒருவரது ​தோளில் அமர்ந்த புறவொன்று, பிடித்து கூண்டுக்குள் அடைக்கப்பட்ட சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ரோவாலா சோதனைச் சாவடியில், பணியில் ஈடுபட்டிருந்ந படை வீரரொருவரின் தோளிலேயே அப்புறா கடந்த சனிக்கிழமை, அமர்ந்துள்ளது.

புறாமீது சந்தேகம் கொண்ட இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர், அப்புறாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். அத்துடன், புறாவின் கழுத்தில், ஒரு குறிப்புச் சீட்டும் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அச்சீட்டில் சில தொலைபேசி இலக்கங்களும் எழுதப்பட்டிருந்தன.

அந்த புறாவானது,  பாகிஸ்தானிலிருந்தே எல்லையை கடந்துள்ளதை  அறிந்த படையினர்,  புறா அனுப்பப்பட்டதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன், பொலிஸ் நிலையத்தில் அப்புறா, தடுத்து​ வைக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .