2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மூன்று வாரங்களாக இளைஞரின் கண்ணுக்குள் வாழ்ந்த புழு

Editorial   / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிகோவில் 17 வயது இளைஞர் ஒருவரின் கண்ணுக்குள் வாழ்ந்த புழுவொன்று சத்திர சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது.



இந்தப் புழு 3 வாரங்களாக இளைஞரின் கண்ணுக்குள் வாழ்ந்திருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அந்தப் புழு, கருவிழி மற்றும் விழித்திரைகளில் துவாரங்களை ஏற்படுத்தியுள்ளதன் காரணமாக இளைஞரின் ஒரு கண்ணின் பார்வை பறிபோயுள்ளது.

கண்ணில் தொடர்ச்சியாக தாங்க முடியாத வலி ஏற்பட்டதாகவும் புழுவொன்று இருப்பதை தான் அறிந்திருக்கவில்லை என்றும் இளைஞர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான புழுக்கள், அவித்த மீன் வகைகள் மற்றும் ஒருசில மரக்கறிவகைகளிலும் வாழ்வதாகத் தெரிவித்துள்ள வைத்தியர்கள், அது கண்ணுக்குள் எவ்வாறு சென்றது என்பது மர்மமாகவே இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளிடமிருந்தும் மனித உடலுக்குள் புழுக்கள் செல்ல வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X