2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மோப்ப சக்தி மூலமாக மலேரியாவை கண்டறியலாம்

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாய்களின் மோப்ப சக்தி மூலமாக மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நுளம்புகளால் பரவக்கூடிய நோயான மலேரியாவுக்கு, ஆண்டுதோறும் 4 இலட்சத்து 45 ஆயிரம் பேர் மரணம் அடைந்து வருவதாக ஆய்வுத் தகவல் கூறுகின்றது. இந்த நோயிலுள்ள சிக்கல் என்னவென்றால், ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி எதுவும் இன்றி தாக்குகிறது.

எனினும், இரத்த பரிசோதனை மூலமாக இந்த நோய் தாக்கியுள்ளதா என்பதை கண்டறிய முடியும். இந்நிலையில், நாய்களின் மோப்ப சக்தி மூலமாகவும் மலேரியாவை கண்டறியலாம் என விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஆய்வு கவுன்சில் இதற்கான ஆய்வை ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் மேற்கொண்டது. அப்போது 5 முதல் 14 வயது வரையிலான, நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய குழந்தைகளின் காலுறைகள் சேகரிக்கப்பட்டது.

அவை அனைத்தும் நாய்களிடம் மோப்ப சக்திக்கு வழங்கப்பட்டது. அதில் 70 சதவிதம் பேருக்கு மலேரியா நோய் இருப்பதை மோப்ப நாய்கள் கண்டுபிடித்தன.

எனவே, இந்த நோயை கண்டறிய நாய்களுக்கு மோப்ப சக்தி பயிற்சி அளிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதேபோல் புற்றுநோய்கள், நீரிழிவு நோயினால் ஏற்படும் கோமா போன்றவற்றையும் கண்டுபிடிக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .