2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உலகக்கிண்ணம் 2018 - இரண்டாம் சுற்றும், முதலாவது காலிறுதியும்

Editorial   / 2018 ஜூலை 06 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச. விமல்
 
உலகக்கிண்ண தொடர்களில் அதிக விறுவிறுப்பாக நடைபெற்றதும், பல எதிர்பாராதா முடிவுகளையும் தந்த இரண்டாம் சுற்றுப் போட்டிகளை உள்ளடக்கிய தொடராக இந்த தொடரை கருத முடியும். இந்த சுற்றில் பலமான அணிகள், உலகக்கிண்ணத்தை வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ள அணிகள் என்ற கருத்தபப்ட்ட அணிகள் பல வெளியேற்றப்பட்டுள்ளன. அதிக ரசிகர்களை உள்ளடக்கிய அணிகள் வெளியேறியதன்  காரணமாக விறு விறுப்பு குறைவைடையும் வாய்ப்புகளுள்ளன. ஆனாலும் இம்முறை காலிறுதிப்போட்டிகளுக்கு தெரிவாகியுள்ள அணிகள் பலம் பற்றி ரசிகர்கள் அறிந்து கொள்ளவும், இவர்களின் பலம் பற்றி அறிந்து கொள்ளவும் இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. உருகுவே அணி ஆரம்பத்தில் கால்பந்தின் ஜாம்பவான். பின்னர் வீழ்ச்சியடைந்தார்கள். இம்முறை அவர்கள் சிறப்பாக விளையாடுவதனால் அவர்கள் பக்கம் பலரின் பார்வை திரும்பியுள்ளது. அதே போன்று பெல்ஜியம் அணி சிறப்பாக விளையாடுவதனால் இம்முறை அவர்கள் உலகக்கிண்ணத்தை வெல்வார்கள் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. பலர் இப்போது அந்த அணிக்கு ரசிகர்களாக மாறிவிட்டார்கள்.
முதல் சுற்றில் ஜேர்மனி அணி வெளியேறியது, ஆர்ஜன்டீனா அணியின் தோல்வி என அதிர்ச்சிகளை தாண்டி இரண்டாம் சுற்று ஆரம்பித்தது. இரண்டாம் சுற்று ஆரம்பித்தது முதல், விறு விறுப்புக்கு பஞ்சமில்லை. ஒவ்வொரு போட்டியும் மிகுந்த விறுவிறுப்பையும் இறுதி நிமிடங்களில் கூட முடிவுகள் மாறிய போட்டிகளாகவும் காணப்பட்டன. பிரபலம் குறைந்த அணிகள் முக்கிய அணிகளுக்கு மிகுந்த சவால்களையும் வழங்கின. அதுமட்டுமல்லாமல் சில முக்கிய அணிகளையும் வெளியேற்றி விட்டார்கள். கடந்த முறை உலகக் கிண்ண தொடரில் முதல் மூன்றிடங்களுயும் பெற்ற அணிகளான ஜேர்மனி, ஆர்ஜன்டீனா, நெதர்லாந்து  ஆகிய அணிகள் காலிறுதிப்போட்டிகளுக்குள்  இல்லை. நெதர்லாந்து அணி உலககிண்ண தொடரிலேயே இல்லை.  கடந்த முறை உலககிண்ண தொடரின் காலிறுதிப்போட்டிகளுக்கு  தெரிவான அணிகள் மூன்று மாத்திரமே இந்த உலககிண்ண தொடரில் விளையாடவுள்ளன. பிரேசில், பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய அணிகளே அவை. இந்த மூன்றணிகளில் பிரேசில் அணி மாத்திரமே அரை இறுதிப் போட்டிகளுக்கு தெரிவான ஓரேயணி.
இரண்டாம் சுற்றின் முதற் போட்டி பிரான்ஸ் மற்றும் ஆராஜன்டீனா அணிகளுக்கிடையிலாலான போட்டியாக நடைபெற்றது. இந்த தொடரின் விறுவிறுப்பான போட்டியாக இந்த போட்டியினையும் கருதலாம். இரண்டாம் சுற்றுப்போட்டிகள் 4-3 என்ற கோல் கணக்கில் முடிவைடைவது மிகவும் குறைவான ஒன்று. இந்த அணிகளுக்கான போட்டியில் நடைபெற்றது. ஆராஜன்டீனா அணியின் மோசமான பந்து பரிபாற்றங்கள்(Ball pass) மற்றும் பந்து பரிமாற்றங்களை சரியாக நிறைவு செய்யாமை போன்றன அவர்களின் தோல்விக்கான காரணமாக அமைந்தது. தங்கள் முன்னிலையில் இருக்கும் போதும் சமநிலையில் இருக்கும் போதும் சிறப்பாக விளையாடியவர்கள் பின்னிலை அடைந்ததும் மனமுடைந்து போட்டியில் சரியாக கவனம் செலுத்தாமல் விளையாடியதை பார்க்க முடிந்ததது. முதல் சுற்றில் கூட இதே நிலைமை காணப்பட்டது. மெஸ்ஸி கூட இந்த உலகக்கிண்ணத்தில் சிறப்பாக விளையாடினார் என கூற முடியாது. இரண்டாம் சுற்றின் வெளியேற்றத்துக்கு அவர் கூட ஒரு காரணமாக கூறலாம். மறுபுறத்தில் பிரான்ஸ் அணி மிகவும் சிறப்பாக விளையாடுகிறது. குறிப்பாக முன் வரிசை வீரர்களின் வேகம் அவர்களுக்கு கை கொடுக்கிறது. பந்துகள் கிடைத்ததும் மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று தாக்குகிறார்கள். இவர்கள் விளையாடும் விதத்தை பார்க்கும் போது உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என நம்ப முடிகிறது. குறிப்பாக அன்டோனி கிரைஸ்மான், தான் சிறந்த வீரர் என்பதனை நிரூபித்து வருகிறார். சிறந்த ஐரோப்பிய வீரர் விருதை வென்றவர் அடுத்த உலகின்   சிறந்த  வீரர் விருதை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பிரான்ஸ் அணி உருகுவே அணியினை சந்திக்கவுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா மோதலாக இது அமையவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான மோதல் என்பது ஒரு வரலாறு. 1938 ஆம்  ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண தொடரை உருகுவே பகிஷ்கரித்ததுடன், இன்னும் சில அணிகளையும் அந்த உலககிண்ணத்தில் பங்குபற்றவிடவில்லை என்பதும் முக்கிய விடயம். எனவே அதனடிப்படையிலும் கூட இந்தப் போட்டி விறு விறுப்பானதாக அமையும். இரு அணிகளுமே சம பலம் கொண்ட அணிகளாகவே காணபப்டுகின்றன. உருகுவே அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பிரான்ஸ் அணி ஒரு சமநிலை முடிவினை பெற்றுள்ளது. இரு அணிகளும் இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. இவற்றில் ஒரு போட்டியில் உருகுவே அணி வெற்றி பெற்றுளளது. இரு போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்தன. தரப்படுத்தலில் பிரான்ஸ் அணி ஏழாமிடத்திலும், உருகுவே அணி பதின்நான்காமிடத்திலும் காணப்படும் அணிகள். 2010 ஆண்டின் பின்னர் உருகுவே அணி காலிறுதிப்போட்டிகளில் விளையாடவுள்ளது. பிரான்ஸ் அணி கடந்த முறையும் உலக கிண்ண தொடரில் விளையாடியது. இவர்களின் பலம் பலவீனம் என பார்க்கும் போது கூட சமபல அணிகளாகவே தென்படுகின்றன.
உருகுவே அணி இரண்டாம் சுற்றில் பலமான போர்த்துக்கல் அணியினை வெற்றி பெற்றே அடுத்த சுற்றுக்கு தெரிவானது. அந்த வெற்றியென்பது இவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையினை ஏற்படுத்தியிருக்கும். கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணியினை வெற்றி பெறுவது இலகுவான விடயமல்ல. அதுவும் முன்னிலையில் இருந்துகொண்டே ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றுள்ளார்கள். போர்த்துக்கல் அணி உருகுவே அணியிடம் தோல்வியடையும் என்ற எதிர்பார்ப்புகள் குறைவாகவே காணப்பட்டன. அதிகமாக பந்துகளை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்த போதும் ஒரு கோலை மாத்திரமே அடிக்க முடிந்தது. ஹட்ரிக் கோல்களுடன் உலககிண்ணத்தை ஆரம்பித்த ரொனால்டோ பின்னர் சிறப்பாக விளையாடவில்லை. ஒரே நாளில் உலகின் தற்போதைய கால்பந்த்து ஜாம்பவான்களின் அணிகள் இரண்டும் உலகக்கிண்ணத்தை விட்டு வெளியேறின. உருகுவே அணி தமக்கு கிடைத்தை வாய்ப்புகளை சரியாக பாவித்துக்கொண்டார்கள். அதுவே அவர்களின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. போர்த்துக்கல் அணி சிறப்பாகத்தான் விளையாடியது. சரியாக வாய்ப்புகளை பாவிக்கவில்லை என்பதும், கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டார்கள் என்பதுமே போர்த்துக்கல் அணியின் தோல்விக்கான காரணங்களாக சொல்ல முடியும். உருகுவே அணியினர் நல்ல ஒருமித்த அணியாக சிறப்பாக விளையாடினார்கள். அவர்களின் முன்னணி வீரரான சுவாரஸ் குறி வைக்கப்பாட்டாலும் கூட மற்றைய வீரர்கள் சிறப்பாக விளையாடினர்கள்  என்பதும் முக்கியமானதாக அமைந்தது.  
15வது உலகக்கிண்ணத்தில் விளையாடும் பிரான்ஸ் அணி இம்முறை எட்டாவது உலகக்கிண்ண காலிறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது. ஐந்து தடவைகள் காலிறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிப்போட்டிகளில் விளையாடும் வாய்ப்பபை பெற்றுள்ளார்கள். 2006 ஆம் ஆண்டின் பின்னர் அரை இறுதிப்போட்டிகளில் இவர்கள் விளையாடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உருகுவே அணி 13 ஆவது உலகக்கிண்ண தொடரில் இம்முறை விளையாடுகிறது. இது அவர்களின் ஏழாவது காலிறுதிப்போட்டியாகும். ஒரு தடவை மாத்திரமே இவர்கள் காலிறுதிப்போட்டியில் தோல்வியினை சந்தித்துள்ளார்கள். பிரான்ஸ் அணி உலகக்கிண்ணத்தை  வெற்றி பெற இரண்டாமிட வாய்ப்புகளும், உருகுவே அணி வெற்றி பெற ஆறாமிட வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆக பிரான்ஸ் அணிக்கான வாய்ப்புகளே அதிகம் என கூறப்படுகிறது. இன்றிரவு 7.30 இற்கு ஆரம்பிக்கும் போட்டி அனைத்து கேள்விகளுக்கும், யூகங்களுக்கும் பதில்களை தரும்.
இரண்டாம் சுற்று முடிவுகள்
 
ஆர்ஜென்டினா vs  பிரான்ஸ் 4 - 3
உருகுவே vs போர்த்துக்கல் 2 - 1

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X