2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கிணறுகள் துப்பரவு செய்யும் திட்டம்

Super User   / 2011 மார்ச் 31 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கல்முனை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிநீர் கிணறுகளை மட்டக்களப்பு செடப்ஸ் நிறுவனம்  கொழும்பு ரொட்டரி கழகத்தின் அனுசரனையுடன் "கிணறுகள் துப்பரவு" எனும் திட்டத்தின் கீழ் 500 கிணறுகளை சுத்தப்படுத்தி குளோறின் இடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

மழை வெள்ளத்தினால் மாவட்டத்தில் பல குடிநீர் கிணறுகளில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதனால் தண்ணீர் மாசடைந்தள்ளது. இதனனால் ஏற்படும் நோய்களை தடுத்து மக்கள் சுத்தமான குடிநீரை பெற வழி செய்யும் நோக்குடன் இக்கிணறுகளை 5 வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றன.

இதேவேளைஇ குறித்த நிறுவனம் மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் 500 கிணறுகள் சுத்தப்படுத்தும் நடைவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .